ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர், திருப்பதி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து வேலூருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசு, தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு பேருந்துகள் பறிமுதல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 அரசுப் பேருந்துகள், 7 தனியார் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகள் ஆந்திராவில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று வழித்தட உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: 23 தமிழ்நாடு பேருந்துகளை பறிமுதல் செய்த ஆந்திரப் பிரதேச அலுவலர்கள்!
குப்பம், பலமனேரி, புத்தூர், சித்தூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் இவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.
தமிழ்நாடு பேருந்துகள் ஒப்படைப்பு
தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் இன்று (ஜன. 16) மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், ’விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட 4 பேருந்துகள் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஆந்திர மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த போருந்துகளுக்கான உரிய அசல் ஆவணங்களை ஆந்திரப் பிரதேச போக்குவரத்து துறையினரிடம் சமர்ப்பித்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்