வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த மூன்று நாட்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் நான்காம் நாளான இன்று திமுக சார்பில் போட்டியிடும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ஏ.சி.வில்வநாதன் கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக சென்று வட்டாச்சியர் பேபி இந்திராவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மேலும் அஇஅதிமுக கட்சியின் சார்பாக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா, யுனெடட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் செல்வமணிஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.