ETV Bharat / state

சின்னம் கேட்டு அடம்பிடிக்கும் வேட்பாளர்...!

வேலூர்: தேர்தல் அலுவர்கள் ஒதுக்கிய சின்னம் வேண்டாம் வேறு சின்னம் வேண்டுமென்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Mar 29, 2019, 9:03 PM IST

வேலூர் வேட்பாளர்

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிந்து. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேலும் இன்று இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்களுக்குச் சின்னம் ஒதுக்க ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஷோபா பாரத் தனக்கு அலமாரி, ஆப்பிள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். எனவே சுயேட்சை வேட்பாளர் ஷோபா பாரதிற்கு அலமாரி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் தனக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் வேண்டும் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

இதனையடுத்து தேர்தல் அலுவலர் ஷோபா பாரத் வேட்புமனுவில் முதல் சின்னமாக அலமாரியை தேர்வு செய்ததால் தான் அலமாரி சின்னம் ஒதுக்கியதாக விளக்கமளித்தார்.

இதனை ஏற்காத வேட்பாளர் மீண்டும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

தேர்தல் அலுவர் ஷோபா பாரத் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும் என எச்சரித்த பின்பு அவருக்கு ஒதுக்கப்பட்ட அலமாரி சின்னத்தையே ஒப்புக்கொண்டு சென்றார்.

சின்னம் கேட்டு அடம்பிடித்த வேட்பாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Intro: ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் தங்கள் கேட்ட சின்னதிற்கு பதிலாக மற்றொரு சின்னம் வழங்கியதால் மற்று சின்னம் தரக்கோரி தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவிலிருந்து பிரிந்த அதிருப்தி வேட்பாளர் ஷோபா பாரத் கடந்த 25 ஆம் தேதி ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஷோபா பாரத் ஆம்பூர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட தனக்கு அலமாரி, ஆப்பிள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா வேண்டும் என விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கான சின்னம் ஒதுக்க இன்று ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் கருத்தரங்கு நடைப்பெற்றது.

இதில் சுயேட்சை வேட்பாளர் ஷோபா பாரதிற்கு அலமாரி சின்னம் ஒதுக்கப்பட்டது, ஆனால் தங்களுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இவர்களுக்கு பதில் கூறிய தேர்தல் அதிகாரி நீங்கள் வேட்புமனுவில் முதல் சின்னமாக அலமாரியை தேர்வு செய்துள்ளீர்கள் அதனால் தான் அலமாரி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்காத வேட்பாளர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தால் தங்கள் வேட்புமனு நிராகரிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Conclusion: சிறிது நேர வாக்குவாதத்திற்கு பிறகு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலமாரி சின்னத்தையே ஒப்புக்கொண்டு வேட்பாளர் அங்கிருந்து சென்றார்

உடனடியாக காவல்துறையினர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வருகைபுரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.