வேலூர்: அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் (மார்ச் 10) வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம் தனி தொகுதி, அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில், புரட்சி பாரத கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு (மார்ச் 11) கே.வி. குப்பம் பேருந்து நிலையத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டர். அதிமுக கோட்டையான கே.வி. குப்பம் தொகுதியை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும், சென்னையைச் சேர்ந்த ஜெகன் மூர்த்திக்கு ஒதுக்கினால் தொகுதி மக்கள் பிரச்னையை கூற சென்னைக்கு அலைய வேண்டி இருக்கும்.
ஆகவே, கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுகவே போட்டியிடவேண்டும் எனவும், உள்ளூர் நபருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...Election Updates: மார்ச் 14 முதல் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை