ETV Bharat / state

"இளம் பெண்கள் பிக்பாஸிலும், கைபேசியிலும் மூழ்கி ஏமாறக் கூடாது" - விழிப்புணர்வு விழாவில் நடிகை ராதிகா அட்வைஸ்! - சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ராதிகா

வேலூரில் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார், பெண்கள் பிக்பாஸிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி ஏமாறாமல் அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு விழாவில் நடிகை ராதிகா அட்வைஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 4:32 PM IST

விழிப்புணர்வு விழாவில் நடிகை ராதிகா அட்வைஸ்

வேலூர்: அரியூரில் உள்ள பிரபல நாராயணி மருத்துவமனையின் சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் இன்று (நவ. 27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை உதவி இயக்குநர் பாலசந்தர் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ராதிகா சரத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு விழாவை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான செவிலியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேட்டினை ராதிகா வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பின்னர், விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், "தற்போது இளைஞர்களும், இளம் பெண்களும் கைபேசியில் மூழ்கி விடுகின்றனர். அதனை தவிர்க்க வேண்டும்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியில், ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது தான் நடக்கிறது. மேலும் யாரையும் நம்பி கைபேசியில் பேசி காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள். பெண்கள் சுய நலமற்றவர்கள் இருப்பினும் பெண்கள் அவரவர் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

மாதம் ஒரு முறையாவது ரத்தம் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உங்களின் உடல் நலனில் அக்கறையை செலுத்துங்கள்" என நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் தலையில் தேசியக் கொடி மற்றும் திமுக கொடி கட்டிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பம்! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.