ETV Bharat / state

குடிநீர் ஆலை விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர்! - குடிநீர் ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல்

வேலூர்: மாவட்டத்திலுள்ள 40 குடிநீர் ஆலைகளில், 37 ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், அதில் 29 ஆலைகளுக்கு தற்போதுவரை சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

action-will-be-taken-without-regard-to-the-issue-of-drinking-water

author img

By

Published : Mar 2, 2020, 7:12 PM IST

வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக உரிய அனுமதியின்றி செயல்பட்டுவரும் குடிநீர் ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துவருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”உயர் நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுவருகிறது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. இதில் 37 நிறுவனங்கள் அனுமதி பெறாமல் உள்ளதாகவும், தற்போது வரை 29 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8 ஆலைகளுக்கு இன்று மாலைக்குள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குடிநீர் ஆலை விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் பேசிய அவர், ’பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை சீல் வைக்கும் பணியின் போது யாரும் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒரு சிலர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல். ஏன் என்றால் உயர் நீதிமன்றம் தற்போதுதான் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட்டு உள்ளதாகவும், அதனால் தடை ஆணை வழங்க வாய்பபேயில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண்: மடக்கிப்பிடித்த மதுரை காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.