வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், வாலாஜாபேட்டைப் பகுதி பாலாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறுவதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா வாலாஜா வருவாய் ஆய்வாளர் சோனியா ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்கள் இரவு பகலாக நடைபெற்ற சோதனையில் 29 லாரிகளில் மணல் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இதில் சென்னைக்கு கடத்தப்படவிருந்த ரூ.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 155 யூனிட் மணலை அலுவலர்கள் லாரிகளுடன் பறிமுதல் செய்தனர்.
![Vellore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4745868_manal.jpg)
மேலும், வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை விவகாரத்தில் பல்வேறு முக்கியப்புள்ளிகள் ஈடுபட்டுள்ள நிலையில், துணிச்சலாக செயல்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
ஹார்டுவேர்ஸ் கடையில் கொள்ளை - ஹார்டிஸ்க்கையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள்