வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10, 20 ரூபாய் நாணயங்களை சில வியாபாரிகள் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. இது வெறும் வதந்தி தான், பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பிற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அதிகபடியான 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நாணயங்கள் அனைத்து வங்கி மற்றும் இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும். இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. ஆகவே, மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி 10, 20 ரூபாய் நாணயத்தை வாங்கியும், கொடுத்தும் கொள்ளலாம். ஏற்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் பல்கலையில் 2 ஆண்டுகளாக ஆட்சிமன்ற குழு தேர்வு நிறுத்தி வைப்பு!