மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஏசி சண்முகம், "தனது கட்சி நிர்வாகிகள் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். திமுக பொருளாளர் துரைமுருகன் 60 ஆண்டுகாலம் அரசியல் அனுபவம் உள்ளவர். இந்தத் தேர்தலில் அவரது மகனை போட்டியிட வைக்கிறார். திமுகவில் எவ்வளவோ மூத்த நிர்வாகிகள் உள்ளபோது அவரது மகனை போட்டியிட வைப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.