வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர், வேலூர், காவேரிப்பாக்கம் வழியாக சென்னை வரை செல்லும் குளிரூட்டப்பட்ட அரசு சொகுசுப் பேருந்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து அனைவருக்கும் இனிப்புகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் எனப் பலரும் பேருந்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, நடக்க முடியாமல் அவதிப்படும் மாற்றுத் திறனாளிகள் இரண்டு பேருக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் சதாசிவம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் to சென்னை - குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்து சேவை துவக்கம்!