வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர் பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் சுரேஷ் (11) குடியாத்தம் பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 21ஆம் தேதி காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது செதுக்கரை அருகே அரசு பேருந்து மோதி பலத்த படுகாயமடைந்தார். அதன்பின் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று (செப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:துணை நடிகை தற்கொலை வழக்கில் மாயமான செல்போன் கண்டுபிடிப்பு