வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு (சிஎம்சி) சிகிச்சைக்காக வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த சுமார் ஐந்தாயிரம்பேர் வேலூரில் உள்ள லாட்ஜ்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சொந்த மாநிலம் செல்ல விரும்பிய 1500க்கும் மேற்பட்டோர் அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் மீதம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஈ-பாஸ் பெற்று ஊர் திரும்பலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், நேற்று 500க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சென்றவர்கள் சைதாப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கும் இவர்கள் காவல் துறையினரால் விரட்டப்பட்டனர்.
இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?