வேலூர்: ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் வழியாக தமிழ்நாட்டிற்கு சொகுசு கார் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்துவதாக குடியாத்தம் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில் குடியாத்தம் அடுத்த கொட்டாலம் வனசோதனைச்சாவடியில் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் நகரம் நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அறிந்த கார் ஓட்டுநர், அலுவலர்கள் நிற்கும் இடத்திற்குச் சில மீட்டர் தூரத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் வனத்துறையினர் ஓட்டுநரை விரட்டிச்சென்றும் பிடிக்க முடியவில்லை. பின்னர் வனத்துறையினர் காரில் சோதனை செய்ததில் 5 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து இதுகுறித்து குடியாத்தம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:போர் முனைப்பில் சீனா..! எச்சரிக்கும் அமெரிக்கா..! எந்த நேரத்திலும் தைவான் மீது படையெடுக்க வாய்ப்பு...?