வேலூர்: சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோட்டை மைதானத்திலிருந்து ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி செல்லும் விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தொடங்கிவைத்தார்.
இதில் வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை மேயர் சுனில் குமார் உள்படப் பலர் பங்கேற்றனர். பேரணியில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் வேலூர் கோட்டை மைதானத்தை வந்தடைந்து முடிவடைந்தது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடர்: நேற்று ஒரே நாளில் 150 வெளிநாட்டு வீரர்கள் வருகை