வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இன்று வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் லாரியில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த புலனாய்வு காவல் துறையினர் லாரியில் இருந்த மூன்றுபேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், முருகன், இஸ்மாயில் என்பது தெரியவந்தது.
ரூ.7லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்றுபேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.