கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் பிருந்தாவனம் விரைவு ரயிலில், வெளிநாட்டு மதுபானம் கடத்துவதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே ஆய்வாளர் வடிவுக்கரசி தலைமையில், ரயில்வே காவலர்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த, பிருந்தாவன் விரைவு ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது பொதுப்பிரிவு பெட்டியில் காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது, சீட்டுக்கு அடியில் ஒரு பையில் வெளிநாட்டு விலை உயர்ந்த 30 லிட்டர் மதுபானங்கள் இருப்பதைக்கண்டு, அதனை பறிமுதல்செய்தனர்.
மேலும் அந்தப் பையில் சோதனை செய்யும்போது அதில் விலாசம் ஒன்றும் இருந்தது. அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என எழுதப்பட்டிந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மதுபானங்களை கடத்தியவர் விலாசத்தில் உள்ள வேல்முருகனா? அல்லது வேறு யாராவது என்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கொள்ளை