வேலூர்: காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோயில் உள்ளது. கடந்த 13-ஆம் தேதி இரவு கோயில் அர்ச்சகர் பாலவிஷ்ணு கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அடுத்தநாள் கோயிலை சுத்தம் செய்யும் நீலாவதி என்ற பெண் வந்து பார்த்தார்.
அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு மூலவர் சன்னதியில் இருந்த வெள்ளி தட்டு, அம்மனின் வெள்ளி கிரீடம் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் பிரபு விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அம்மன் கிரீடம் உள்பட ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை திருடியதாக சேனூர் கிராமத்தை சேர்ந்த தினேஷ் (21), பிரேம்நாத் (19), ராகுல் (19) ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:B.Sc புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். பட்டப்படிப்பாக அறிமுகம் செய்த சென்னை ஐஐடி