வேலூர் மாவட்டம் பீஞ்சமந்தையை அடுத்த தேந்தூர் மலை கிராமத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுவருவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது தேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (22) என்பவர் தனது நிலத்தில் 25 கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று கமலா (50) என்பவரும் தனது நிலத்தில் 50 கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் யாரேனும் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்... மாந்திரீகம் காரணம்..?