வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் இன்று (ஜூலை16) மாவட்டத்தில் புதிதாக 192 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,652 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,313 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர் உள்பட 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.