ETV Bharat / state

கட்டுக்கடங்காத கரோனா... வீதி உலாவந்த எமதர்மன்: பொதுமக்களே உஷார்!

திருச்சி: கரோனா தனது படலத்தை விரிவாக்கியுள்ள நிலையில் எமதர்மன் வடிவில் வீதி உலா வந்த இளைஞர்கள் பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்
விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்
author img

By

Published : Apr 16, 2020, 2:52 PM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பிரிவு சாலையில் மண்ணச்சநல்லூர் காவல் துறை, இளைஞர்கள் சங்கம் சார்பில் எமதர்மன் வேடமணிந்தும், ஓவியம் வரைந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நையாண்டி மேளத்துடன் எமதர்மன் வேடமணிந்து பாசக் கயிறைக் கொண்டு அவ்வழியே தேவையின்றி சுற்றியவர்களின் கழுத்தில் போட்டு இழுத்துவந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்குக் காவல் துறையினர் முகக்கவசம் அணிவித்து, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

பல்வேறு விழிப்புணர்வுப் பாடல்கள் மூலம் பொதுமக்களிடையே கரோனாவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு தனித்திரு, விழித்திரு என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மண்ணச்சநல்லூர் உதவி ஆய்வாளர் அகிலன், கணேச மூர்த்தி ஆகியோர் ஏழை எளியவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கினர்.

பின்னர் அவ்வழியே சென்ற வாகனங்களில் முகக்கவசம் இல்லாமல் பயணம்செய்த பொதுமக்களிடம் கரோனா விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா: பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கிய எம்.எல்.ஏ.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.