திருச்சி: துறையூர் அருகே உப்பிலியபுரத்தில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர், 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அவர் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பதாக, உப்பிலியபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த உப்பிலியபுரம் போலீசார், ஜெயதேவன் தோட்டத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 100 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.
உரிமம் பெறாமல் துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் வைத்திருந்ததால் ஆயுத தடை சட்டத்தில் சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்