ETV Bharat / state

திருச்சியில் H3N2 வைரஸ் காய்ச்சலால் இளைஞர் பலி! - h3n2 long term effects

திருச்சியில் H3N2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் H3n2 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Mar 12, 2023, 10:25 PM IST

Updated : Mar 12, 2023, 10:43 PM IST

திருச்சி: மலைக்கோட்டை சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்று விட்டு 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்துள்ளார். அதன்பின் அவருக்கு தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று (மார்ச் 11) உயிரிழந்தார். இவரது மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு H3n2 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 3 மாதங்களாக A (H3N2) என்னும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் 2 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. இந்த H3N2 வைரஸ் காய்ச்சலுக்கு தொடர் இருமல், தொண்டை வலி, உடல் வலி, குளிர்க்காய்ச்சல் அறிகுறிகளாக உள்ளன. இருதய நோய் உள்ளிட்ட சுவாசக் கோளாறு நோயாளிகள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஆனால், இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்தில்லை. மருத்துவர்களின் ஆலோசனையின்படி மருந்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணமடையும் என்று இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வைரஸ் என்பதால் பரவக்கூடிய தன்மை கொண்டது. ஆகவே, காய்ச்சல் வந்தவர்கள் முகக் கவசம் அணி வேண்டும். இவர்கள் பயன்படுத்திய பொருள்களை மற்றவர்கள் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆய்வு மையத்தின் தரவுகளின்படி ஜனவரி மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 451 பேருக்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் ஏற்படும் காய்ச்சலை போலவே H3n2 வைரஸ் காய்ச்சலும் பருவகால காய்ச்சலாகும்.

இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் பயப்படத்தேவை இல்லை. கோடைக்காலம் நெருங்கிவிட்டாதால், வைரஸின் பரவல் வீரியம் விரைவில் குறையும். இந்த காய்ச்சல் அனைவருக்கும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் தொடர் நோயாளிகளுக்கு ஏற்படும். உலகம் முழுவதும் A, B, C மற்றும் D என 4 வகையான பருவகால காய்ச்சல் வைரஸ்கள் உள்ளன. அதில் A மற்றும் B இன்ஃப்ளூயன்ஸா வகைகள் அதிக தாக்கங்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவில் பரவும் H3n2 வைரஸ் காய்ச்சல்.. முக்கிய அறிகுறி தொண்டை வலி.. குழந்தைகளை தாக்கும் அபாயம்..

Last Updated : Mar 12, 2023, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.