ETV Bharat / state

ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனது: திருச்சியில் பரிதாபம்

திருச்சி: தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

college students
college students
author img

By

Published : Mar 15, 2020, 4:29 AM IST

திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக சென்றார்.

இங்கு திருச்சி நகரைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் உடற்பயிற்சி, நீராவி குளியல், மசாஜ் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த பயிற்சி கூடத்தில் ராகவனும் நீராவி குளியலுக்காக ஏற்கனவே மூன்று முறை சென்று வந்துள்ளார்.

இந்த பயிற்சி கூடத்தில் நீராவிக் குளியல் அறை ஒரு கழிவறை போல் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி அளவு மற்றும் நேர கட்டுப்பாட்டுக்கு ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கதவை சாத்திவிட்டு நீராவி குளியலில் ஈடுபட்டிருந்த ராகவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால், ராகவன் நீராவி குளியல் அறை உள்ளேயே மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

ரத்தம் கொட்டிய நிலையில், நீராவி வெளியேறி கீழே விழுந்த ராகவனின் கால்களை தாக்கியதில், அவரது ஒரு கால் முற்றிலும் நீராவி வெப்பத்தால் வெந்துள்ளது. ரத்தக்கசிவு கதவு வழியாக வெளியே வந்ததைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று கதவை திறந்து பார்த்தனர். இதனையடுத்து மயக்க நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனது

ஆனால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் கோமா நிலையிலும், அதைத் தொடர்ந்து 6 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து ராகவனின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நியாயம் கேட்டதற்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை சிகிச்சைக்கான செலவு தொகையையும் வழங்காமல் பெற்றோரையும் உடற்பயிற்சி கூட நிர்வாகம் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லாதது தெரியவந்தது. மேலும் நீராவியில் ரசாயனம் எதுவும் கலந்ததா?, இதன் காரணமாக ராகவன் மயக்கமடைந்தாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாக ராகவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட இளமதி காவல் நிலையத்தில் ஆஜர்... சாதி மறுப்புத் திருமணத்தில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.