திருச்சி: தமிழ்நாடு கல்குவாரிகள் மற்றும் கிரஷர் நலச்சங்கத்தின் தலைவர் சின்னச்சாமி மற்றும் சங்கத்தினர். திருச்சி பத்திரிகையாளர்கள் மன்றத்தில் கூட்டாக இன்று (ஜூன் 26) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூறுகையில், 'இன்று முதல் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 2,500 கல்குவாரிகள் மற்றும் 3,000 கிரஷர்களில் வேலை செய்வோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைபிடிக்க முடியாத பல விதிகளை காரணம் காட்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்கிற போர்வையில் திரியும் சிலர், வேண்டுமென்றே தங்களை தாழ்மைப்படுத்த, பொதுமக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகவும், கல்குவாரி தொழிலை பொருத்தவரை, நாட்டின் ஜி.டி.பிக்கு 2% இது பங்கு வகிப்பதாகவும் கூறினர். மேலும் அவர்கள், இந்த முக்கியமான தொழிலலை முடக்கி, எங்களுக்கு களங்கம் விலைவிக்க வேண்டும் என்றே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.
ஒரு குவாரியில் ஒரு சின்ன பிரச்சனை என்றால், அது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாதிப்பதாகவும், இப்படியே கடுமையான நெருக்கடிகள் இருந்தால், எதிர்காலங்களில் கனிம வளம் சார்ந்த பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகும் என்று கூறிய அவர் இதனால், கட்டிடத் தொழில் வெகுவாக பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். அத்தோடு, அரசு கொண்டு வந்துள்ள மைனிங் பிளான் என்ற புதிய நடைமுறைகள், தங்களுக்கு கண்டிப்பாக சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.
மத்திய அரசு கொண்டு வந்து, தமிழக அரசு கனிம வளத்துறையின் கீழ் செயல்படுத்தி வரும் மைனிங் பிளான் புதிய நடைமுறையை (New mining plan by TN Govt) தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், ரூ.15 கோடிக்கு மேல் நாங்கள் முதலீடு செய்து கிரஷர் (M-sand) ஏற்படுத்தி, ஒரு குவாரியை உருவாக்குவதாகவும் கூறினர். ஆனால், 1 வருடம் மட்டும்தான் தங்களால் கனிமத்தை எடுக்க முடிவதாகவும், மீதம் 3 வருடம் தங்களால் குவாரிகளில் பொருளை எடுக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்தனர். இதனால், தங்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தனர்.
தற்போது தங்களுக்கு நெருக்கடி என்னவென்றால் 2016-ல் கொண்டு வரப்பட்ட மைனிங் பிளானின் படி, அதிகாரிகள் செயல்படுவதாக கூறிய அவர், கடந்த 20 நாட்களாக அதிகாரிகள் புதிய நடைமுறையை கையில் எடுத்து கொண்டு நெருக்கடி தருவதாக குற்றம்சாட்டினர். எனவே, இதனை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு புதிய நடைமுறையை நிறுத்தவில்லை என்றால், தங்களால் கண்டிப்பாக தொழிலை செய்ய முடியாது என்றும் கூறினர்.
மத்திய அரசு 2016-ல் இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்ததாகவும்; அப்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இதை ஏற்று கொள்ளவில்லை என்றார். ஆனால், தமிழக அரசு மட்டும் புதிய மைன்ஸ் பிளான் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் எனவே, தமிழக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் கல்குவாரிகள் 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு கொடுத்து வர்ம் நிலையில் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் 30 வருடம் குவாரிகளை குத்தகைக்கு வழங்குவது போல வழங்க வேண்டும்' என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மதுவிற்பனையா? உடனடி தீர்வு பணியிடைநீக்கம் தான்! அமைச்சர் அதிரடி