திருச்சி விமான நிலையத்திற்கு வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தது குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் கூவத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்காக சிங்கப்பூர் சென்றார். ஆனால் அது இன்னும் தூய்மைப் படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை கேட்ட போது எத்தனை முறை கொடுத்துள்ளார். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக வெளிநாடு சென்றோம் எனக் கூறுவது பொய்.
தமிழ்நாட்டில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏற்கனவே இருந்த ஒரு திட்டம்தான். அது இடையில் சில காலம் இல்லாமல் இருந்தது. தற்போது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மீண்டும் அதை நடைமுறைப் படுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசின் கொள்கை இரு மொழி கொள்கை தான். அதைத் தொடர்ந்து பின்பற்றுவோம். நானும் எடப்பாடி பழனிசாமியும் நல்ல புரிதலோடு இருக்கிறோம். எங்களை பிரிக்க நீங்கள்தான் முயற்சி செய்கிறீர்கள், அது நடக்காது" என்றார்.