ETV Bharat / state

சரிந்து விழுந்த நீர்தேக்கத் தொட்டி, தண்ணீருக்கு எங்கே போவது - புலம்பும் பொதுமக்கள்! - நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள்

திருச்சி: அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் மணியாரம்பட்டியில் உள்ள நீர்தேக்கத் தொட்டி சரிந்ததால், இனி தண்ணீருக்கு எங்கே போவது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

சரிந்து வீழ்ந்த நீர்தேக்கத் தொட்டி
author img

By

Published : Oct 3, 2019, 8:15 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சி மணியாரம்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் பழுதாகி விட்டதால் நீர் ஏற்றம் முழுமையாக செய்ய முடியவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சிதிலமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நீர்தேக்கத்தொட்டியை அகற்ற கடிதம் மூலம் ஆவணங்கள் மட்டுமே தயார் செய்துள்ள நிலையில், பழுதாகியுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூண்கள் சீரமைக்கப்படவில்லை. அதற்கான மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

சரிந்து வீழ்ந்த நீர்தேக்கத் தொட்டி

இந்நிலையில், இன்று அதிகாலை தூண்கள் நான்கும் இடிந்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சரிந்து மண்ணில் விழுந்தது. அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தரையில் சிதறி வீணானது. அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் குவிந்த அப்பகுதி பொதுமக்கள் தொட்டியில் இருந்த நீரை வாளி மூலம் கயிறு கட்டி இரைத்து தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றனர். அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை.

மக்களின் பிரச்னைகளில் ஓராண்டாக அலட்சியமாக இருந்து வந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தற்போது அப்பகுதியில் ஏற்படப் போகும் தண்ணீர் பற்றாக்குறையையாவது சரியான நேரத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்கலாமே: தண்ணீர் குழாயில் இனி செல்போனுக்கு சார்ஜ் போடலாம் - ஆந்திர மாணவரின் அதிசய கண்டுபிடிப்பு

Intro:அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் - தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட பரிதாபம்?Body:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சி மணியாரம்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் பழுதாகி விட்டதால் நீர் ஏற்றம் முழுமையாக செய்ய முடியவில்லை, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சிதிலமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நீர்தேக்கத்தொட்டியை அகற்ற கடிதம் மூலம் ஆவணங்கள் மட்டுமே தயார் செய்துள்ள நிலையில், பழுதாகியுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூண்கள் சீரமைக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை தூண்கள் நான்கும் இடிந்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சரிந்து மண்ணில் விழுந்தது. அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தரையில் சிதறி வீணானது. அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் குவிந்த அப்பகுதி பொதுமக்கள் தொட்டியில் இருந்த நீரை வாளி மூலம் கயிறுக்கட்டி இரைத்து தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றனர். அதிகாலை நடந்த இச்சம்பவத்தால் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

மக்களின் பிரச்சனைகளில் ஓராண்டாக அலட்சியமாக இருந்து வந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தற்போது அப்பகுதியில் ஏற்படப் போகும் தண்ணீர் பற்றாக்குறையையாவது காலத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.