அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி கீழே புலிவார்டு ரோடில் அமைப்பின் நிறுவன தலைவர் அந்தமான் சுப்பிரமணியன் இந்தத் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து ஏழை எளியவர்களுக்கு வழங்கினார்.
இதில், இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முதலாவது ஆண்டாக இந்தத் தண்ணீர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோடை காலம் முடியும்வரை தினமும் இந்தத் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மக்கள் தாகம் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் சேகர், அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் காட்வின், முபாரக், சந்தோஷ் குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தத் தண்ணீர் பந்தல் மூலம் கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள் பயனடைந்தனர்.
அரசு, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற ஏற்பாடு - ஸ்டாலின் வலியுறுத்தல்