திருச்சி: 'கிராமசபை மீட்புப் பயணம் 2021' என்ற தலைப்பில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை மீட்புப் கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். தடையின்றி கிராம சபை நடத்த வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி நிர்வாகம் எதிர்கொண்டு வரும் சவால்கள், கிராம சபையைக் கூட்டுவதற்கு ஊராட்சிக்கு உள்ள அதிகாரம், அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபையை நடத்த தயாராவது உள்ளிட்டவைகள் குறித்து இதில் பேசப்பட்டது.
ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள தற்போதைய சூழ்நிலையை எடுத்துக் கூறினார்கள். ஊராட்சியின் நிதிப்பரிவர்த்தனை முதல் அனைத்து அதிகாரமும் அலுவலர்களின் வசம் தான் உள்ளது. தங்கள் ஊராட்சிக்குத் தேவையான அத்தியாவசிய பணிகளைச் செய்து தருவதற்கு கூட அலுவலர்களை எதிர்பார்த்து இருக்க வேண்டியுள்ளது என்றனர்.
அலுவலர்களின் அதிகாரத்திலிருந்து படிப்படியாக பஞ்சாயத்து அதிகாரம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை நடத்துவதற்கான அறிவிப்பை கொடுப்போம் என்றனர்.
மேலும் இந்த கூட்டம் நாமக்கல், சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெற்றது.
இதையும் படிங்க: 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி