ETV Bharat / state

தள்ளுவண்டி மூலம் வீதிவீதியாக காய்கறி விற்பனை

திருச்சி: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் வீதிவீதியாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

தள்ளுவண்டி மூலம் வீதிவீதியாக காய்கறி விற்பனை
தள்ளுவண்டி மூலம் வீதிவீதியாக காய்கறி விற்பனை
author img

By

Published : Apr 14, 2020, 9:43 AM IST

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி மூலம் நடமாடும் தள்ளுவண்டிகளில் வீதி வீதியாக சென்று காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.100க்கு காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆணையர் சிவசுப்ரமணியன் கூறுகையில்,

கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறுமின்றி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் எளிதில் கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைக்க மாநகரம் முழுவதும் 65 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பொன்மலை கோட்டத்தில் உள்ள 17 வார்டுகளில் வார்டு ஒன்றுக்கு இரு தள்ளுவண்டி வீதம் மாநகராட்சி பணியாளர்கள் நடமாடும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மாங்காய், தேங்காய், தக்காளி, பெரியவெங்காயம், கத்திரிக்காய், பீட்ரூட், முருங்கைக்காய், வாழக்காய், கேரட், பச்சைமிளாகாய், இஞ்சி, கருவேப்பிள்ளை, கொத்தமல்லி, புதினா ஆகிய தொகுப்புகள் கொண்ட காய்கறிகள் பை ரூ.100க்கு இந்த நடமாடும் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனைக்குச் செல்லும் பணியாளர்கள் கையுறை, முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு விற்பனை செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.