ETV Bharat / state

வேலையின்றி தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

திருச்சி: பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : May 20, 2020, 6:55 PM IST

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஆட்டோக்கள் ஓட தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத் தலைவர் கோபிநாத் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் அரசு அறிவித்துள்ள நிவாரணம், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நான்கு நபர்களை சமூக இடைவெளியுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

அதேபோன்று ஈரோட்டில் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சாலை வழி போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை, மரணம், படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக அரசு அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஈரோடு மாவட்ட அனைத்து வாகன ஓட்டுநர்கள், ஆக்டிங் ஓட்டுநர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆகவே அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: வெளி மாநிலம் சென்று வரும் லாரி ஓட்டுநர்கள் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்’ - ஆட்சியர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.