ETV Bharat / state

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்-வணிகவியல் சங்கம் - Association of Business Schools

திருச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத 500 வணிகவியல் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்
author img

By

Published : Jul 28, 2019, 7:15 PM IST

திருச்சியில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து வணிகவியல் பள்ளிகளில் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ”தமிழ்நாட்டில் மொத்தம் 2,300 பள்ளிகள் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வணிகவியல் பள்ளி செயல்படுகின்றன. இது இல்லாமல் 500 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுகின்றன.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் செயல்படுத்தவேண்டும். அதோடு தட்டச்சு, கணக்குப்பதிவியல், சுருக்கெழுத்து ஆகியவற்றிற்கான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் தட்டச்சு தேர்வை எழுதுகின்றனர். இதில் இளநிலை பிரிவுக்கு முந்தைய பிரிவான புதுமுக இளநிலை தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும்” உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Intro:தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க 50ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.

Body:திருச்சி:
தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரமில்லாத 500 வணிகவியல் பள்ளிகளை நீதிமன்ற உத்தரவுபடி மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்க 50வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

தமிழகம் முழுவதும் இருந்து வணிகவியல் பள்ளிகளில் உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப்பதிவியல் உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவ மாணவிகளை தயார்படுத்தும் வணிகவியல் பள்ளிகள் தமிழகத்தில் 2,300 செயல்படுகிறது. இது இல்லாமல் 500 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது. இந்த பள்ளிகளை மூட மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் செயல்படுத்த வேண்டும்.
அதோடு தட்டச்சு, கணக்குப்பதிவியல், சுருக்கெழுத்து ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் இளநிலை பிரிவுக்கு முந்தைய பிரிவான புதுமுக இளநிலை தேர்வுகளை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.