திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 77 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், குழந்தை சுஜித்தை மீட்க அனுபவம் வாய்ந்த, குரிந்தர் சிங், ஹர்விந்தர சிங் ஆகிய இரண்டு விவசாயிகள் இரவு 11.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரவுள்ளனர். இவர்கள் இருவரும் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ஏற்பாட்டில் நடுக்காட்டுப்பட்டிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.