புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த உடையாம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் மங்கனூரை சேர்ந்த அவரது உறவினர் பழனிவேல் என்பவருடன் வேலை சம்பந்தமாக திருச்சிக்கு காரில் சென்றார்.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள களத்துப்பட்டி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்புற டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த பழனிவேல், பழனிசாமி ஆகிய இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பழனிவேல் உயிரிழந்தார்.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் பழனிசாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவர் குருபூஜைக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எட்டுபேர் படுகாயம்!