கரோனா பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக விரோதிகள் சிலர் நூதன முறையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே அமையபுரம் தாதம்பட்டி பகுதியில் பழச்சாறில் மது தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று (மே.18) காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பழங்களை ஊரல் போட்டு மது தயாரித்த அதே பகுதியை சேர்ந்த சேசுதாஸ்(60). அவரது மகன் ஜான் ஜோசப்(27) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், இரண்டு குடங்களில் இருந்த பழச்சாறு மதுபானத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமுடக்கத்தால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், சிலர் இது போன்று மது தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் கேன்கள் விற்பனை அதிகரிப்பு!