திருச்சி: ஏஐசிடியூ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஜடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ், ஏஜடியுசி தரைக்கடை சங்க அமைப்பாளர் சிவா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:
- தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்வதற்கு ஓடிபி (OTP) எண், ஆதார் இணைப்புக்கு தொலைபேசி எண், கிராம நிர்வாக அலுவலர் சான்று கேட்க கூடாது.
- கரோனா காலத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நலவாரியத்தில் ஆன்லைன் மூலமாக சேர்வதற்கு அறிவித்து சேர்ந்த தொழிலாளர்களுக்கு வாரிய அட்டையை உடனே வழங்க வேண்டும்.
- பல லட்சம் தொழிலாளர்களுக்கு உடனே புதுப்பித்தல் செய்து கொடுக்க வேண்டும்.
- நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் கல்வி உதவித்தொகை கேட்பு மனுவை பெற உடனே உத்தரவிட வேண்டும்.
- தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரணம் ரூபாய் இரண்டாயிரம் மற்றும் ரேஷன் தொகுப்பை திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும்.
- அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா காலம் முழுவதும் கணக்கிட்டு ரூ.7,500 வீதம் மத்திய, மாநில அரசுகள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.