ETV Bharat / state

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54 ஆசிரியர்கள் பணி நியமன அறிவிப்பில் முறைகேடு! - 54 Irregularities in Teacher Appointment Notice

திருச்சி:  பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 54 ஆசிரியர் பணி நியமன அறிவிக்கையில் உள்ள விதிமீறல்களைக் களைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

trichy university teachers association
author img

By

Published : Nov 2, 2019, 10:01 AM IST

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிவிக்கை பல்கலைக்கழக நடைமுறைப்படியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமலும் வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிக்கை மூலம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கக்கூடிய ஒரு செயல் நடந்துள்ளது. நேர்காணலில் விண்ணப்பதாரரின் நியமன தகுதி முழுமையாகக் கண்டறியப்போவதாகவும் அவர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம், கல்வி சாதனை ஆகியவற்றை முதுநிலைப் பட்டியல் தயாரிப்பதற்கு மட்டுமே கணக்கில் கொள்ளப்போவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் எந்தவித வெளிப்படைத் தன்மை இல்லாத ஊழல் செயல்பாட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகும். அதனால் உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், 54 பணியிடங்களில் 15 பணியிடங்கள் அதாவது 30 விழுக்காடு ஆதரவற்ற விதவைகளுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்தப் பணி நியமன அறிவிக்கை தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநரும் தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பணி நியமன செயல்பாடுகளில் உள்ள விதிமீறல்களையும் முறைகேடுகளையும் கலைந்து நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

சுஜித்தின் மீட்புப் பணிக்கு ரூ.5 லட்சம் மட்டுமே செலவு - ஆட்சியர் அறிக்கை

Intro:திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 54 ஆசிரியர் பணி நியமன அறிவிக்கையில் உள்ள விதிமீறல்களை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.Body:திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 54 ஆசிரியர் பணி நியமன அறிவிக்கையில் உள்ள விதிமீறல்களை களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் கடந்த ஜூலை மாதம் 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கை பல்கலைக்கழக நடைமுறைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் தன்னிச்சையாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிக்கை மூலம் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்க கூடிய ஒரு செயல் நடந்துள்ளது. நேர்காணலில் விண்ணப்பதாரரின் நியமன தகுதி முழுமையாக கண்டறிய போவதாகவும், அவர்களின் கல்வித்தகுதி, பணி அனுபவம், கல்வி சாதனை ஆகியவற்றை முதுநிலை பட்டியல் தயாரிப்பதற்கு மட்டுமே கணக்கில் கொள்ளப் போவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எந்தவித வெளிப்படைத் தன்மை இல்லாத ஊழல் செயல்பாட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகும். அதனால் உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். பல்கலைக்கழகத்தில் தாவர அறிவியல் துறை, தாவரவியல் துறை என 2017- 2018 ஆம் ஆண்டுகளில் பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பணிநியமன அறிக்கையில் தாவர அறிவியல் துறைக்கு இரண்டு உதவி உதவி பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருப்பது கேலிக்கூத்தான விஷயமாகும். மேலும் 54 பணியிடங்களில் 15 பணியிடங்கள் அதாவது 30% ஆதரவற்ற விதவைகளுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த பணி நியமன அறிவிக்கை தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக ஆளுநரும், தமிழக அரசு இதில் தலையிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர் பணிநியமன செயல்பாடுகளில் உள்ள விதிமீறல்களையும், முறைகேடுகளையும் கலைந்து நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.