கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக திருச்சியில் செயல்பட்டுவந்த தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு மாற்றாக எதிரே உள்ள மாநகராட்சி திறந்தவெளி திடலில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.
இந்த தற்காலிக சந்தை தகர கொட்டகையை மேற்கூரையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (செப். 28) அங்கு பரவலாக பெய்த மழையால், அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகை சரிந்து விழுந்தது.
அப்போது இரவு நேரம் என்பதால் கடைகள் செயல்படவில்லை. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலை விழுந்த தகரக் கொட்டகையின் முன்பு வியாபாரிகள் காய்கறிகளை விற்பனைசெய்தனர்.