இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், மால்கள், ஜவுளிக்கடைகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இதில் எந்தெந்த கோயில்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதனால், பக்தர்கள் அருகில் உள்ள இதர கோயில்களுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டிருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயில் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்படும்