திருச்சி: கடந்த 11 ஆம் தேதி இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் நடைபெற்ற விபத்து தொடர்பாக, பாஜக ஓபிசி மாநில பொதுச்செயலாளரும், திருச்சி திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா சிவா, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா, “ என்னை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிரட்டி வருகிறார்கள். என்னை கைது செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். எனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், புதிய புகாரின்பேரில் என்னை காவல்துறையினர் கைது செய்ய முனைந்திருப்பது கண்டிக்கதக்கது” என தெரிவித்தார்.
இதனிடையே சூர்யா சிவாவை கைது செய்த காவல்துறையினர், கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜசேகர் தலைமையிலான 20 க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக ஆகலாம்.. ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது - திருச்சி சிவா