ETV Bharat / state

ஜனவரி 20இல் தென் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் - தென் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி : மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு இருக்கும் தென் சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வரும் 20ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

saibaba temple kumbabishekam
saibaba temple kumbabishekam
author img

By

Published : Jan 13, 2020, 11:29 PM IST

திருச்சி அருகே 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென் சீரடி சாய்பாபா கோயிலிம் கும்பாபிஷேக விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ சாய் கற்பக விருக்ஷம் டிரஸ்ட் அறங்காவலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”திருச்சி மாவட்டம் சமயபுரம் அக்கரைப்பட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அங்கு உள்ள ஞான பூமி குருஸ்தானத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தென் சீரடி சாய்பாபா கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பக்தர்களின் நன்கொடைகள் மூலம் படிப்படியாக ரூ. 30 கோடி ரூபாய் செலவில் தற்போது தென் சீரடி பாபா சாய்பாபா கோவில் தயாராகியுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேகம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:15 மணி வரை நடைபெறுகிறது.

தென் சீரடி சாய்பாபா கோவில் ஜனவரி 20ஆம் தேதி கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளார்கள். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், குளியலறை, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு தேவையான பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் புதிய ஆலயத்தில் ராஜஸ்தானில் தயார் செய்யப்பட்ட ஸ்ரீ சாய்பாபா திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Intro:திருச்சி அருகே ரூ. 30 கோவில் கோடி செலவில் கட்டப்பட்ட தென் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வரும் 20ஆம் தேதி நடக்கிறது. Body:திருச்சி:
திருச்சி அருகே ரூ. 30 கோவில் கோடி செலவில் கட்டப்பட்ட தென் சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் வரும் 20ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து ஸ்ரீ சாய் கற்பக விருக்ஷம் டிரஸ்ட் அறங்காவலரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அக்கரைப்பட்டியில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி அங்கு உள்ள ஞான பூமி குருஸ்தானத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தென் சீரடி சாய்பாபா கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பக்தர்களின் உதவி மற்றும் நன்கொடைகள் மூலம் படிப்படியாக ரூ. 30 கோடி செலவில் தற்போது தென் சீரடி பாபா சாய்பாபா கோவில் தயாராகி உள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 65 ஆயிரம் சதுர அடி பரப்பில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மகாகும்பாபிஷேகம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.15 மணி வரை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளார்கள். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், குளியலறை, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய ஆலயத்தில் ராஜஸ்தானில் தயார் செய்யப்பட்ட ஸ்ரீ சாய்பாபா திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.