ETV Bharat / state

கரோனா ஊரடங்கு -  பாதிப்படைந்த ரயில்வே பயணச்சீட்டு முகவர்களும் பயணிகளும்! - Rail transport

திருச்சி: கரோனா தொற்று காரணமாக பொதுப்போக்குவரத்தில் ஒன்றான ரயில் போக்குவரத்தானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரயில்வே நிறுத்தம் அதை சார்ந்த பலரின் வாழ்க்கையில், அங்கும் அங்குலமாய் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது. அதுகுறித்த சிறப்புத் தொகுப்பு...

பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி ரயில் நிலையம்

author img

By

Published : Sep 6, 2020, 7:52 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்து, தொழிற்சாலை, சிறு குறு வியாபாரங்கள் என பல கட்டமைப்புகள் முடங்கின. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுப்போக்குவரத்துகளான சர்வதேச விமானப்பயணம் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பயன்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பொதுப்போக்குவரத்தான ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருப்பது, ஆயிரக்கணக்கான குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, இந்த ரயிலை நம்பி நூற்றுக்கணக்கான உப தொழில்கள் நடைபெற்று வந்தது. மேலும் ரயில் சேவையை மட்டுமே நம்பி இருந்த இத்தகைய தொழில்கள் தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.

அந்த வகையில் ரயில்களில் இன்பச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் முகவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ரயில் முடக்கம் காரணமாக இந்த முகவர்கள் சுற்றுலா ஏற்பாடு செய்ய முடியாமல் முடங்கி உள்ளனர். இதனால் இவர்கள் வாருவாய் ஏதுமின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல டிக்கெட் புக்கிங் ஏஜென்ட்களும் இந்த ரயில் சேவை நிறுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சியில் உள்ள சுற்றுலா ரயில்கள் மற்றும் பொது ரயில்கள் அனைத்தும் டிக்கெட் புக்கிங் செய்து வந்த பாலக்கரையைச் சேர்ந்த கோல்டன் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், கரோனா தொற்று காரணாமாக கடந்த 6 மாதமாக பூட்டப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு - பாதிப்படைந்த ரயில்வே பயணச்சீட்டு முகவர்களும் பயணிகளும்

இது குறித்து சுற்றுலா அழைத்துச் செல்லும் திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், 'மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இரண்டு குழுவினரை இன்பச் சுற்றுலா அல்லது ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வோம். கரோனா தொற்று காரணமாக கடந்த ஆறு மாதங்களாக எங்களால் சுற்றுலா அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், மக்கள் சுற்றுலா செல்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இன்பச் சுற்றுலா மற்றும் ஆன்மிகச் சுற்றுலாவுக்கு நாங்கள் அழைத்துச் சென்று வருகிறோம். லாபம் இல்லாமல் சேவை நோக்கோடு, இதை நாங்கள் செய்து வந்தோம். சீரடி போன்ற ஆன்மிக ஸ்தலத்திற்கு குறைந்த செலவில் மக்களை அழைத்துச் சென்று வந்தோம். இதுபோன்ற சுற்றுலாக்கள் விமானம் மூலமோ அல்லது கார்கள் மூலமோ சென்றால் அதிக அளவில் செலவாகும். குறிப்பாக முதியவர்கள் ரயில்களில் மட்டுமே சவுகரியமாக பயணம் செய்ய முடியும். அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதை எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் விரைவு ரயில்கள் ஓடும் என்ற அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. அதனால் மீண்டும் சுற்றுலா தொடங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்றார்.

இதுகுறித்து ஐஆர்சிடிசி திருச்சி முகவரும், திருச்சி பாலக்கரை கோல்டன் அசோசியேட்ஸ் டிக்கெட் புக்கிங் சென்டர் உரிமையாளருமான அக்பர் அலி கூறுகையில், 'கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்கள் ஓடவில்லை. இதனால் ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங்கை எங்களால் செய்ய முடியவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. தற்போது 6 மாதங்கள் ஆகியும் இந்த கரோனாவின் தாக்கம் குறையாததால் தொழில் முடக்கம் ஏற்பட்டதால், நான் கடையை மூடி விட்டேன். இந்த ரயில்வே புக்கிங்கை மட்டுமே பிரதானத் தொழிலாக, நான் மேற்கொண்டு வந்ததால், வேறு எந்தத் தொழிலிலும் நான் ஈடுபடவில்லை. மேலும் பொது ரயில்களுக்கான டிக்கெட் புக்கிங் செய்து கொடுப்பதால், மத்திய அரசிடம் இருந்து எனக்கு கமிஷன் கிடைக்கும். ஆனால், தற்போது எந்தவொரு வருமானமும் இன்றி குடும்பம் நடத்தவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதேபோல் எங்களிடம் சுற்றுலா வந்த வாடிக்கையாளர்கள் தற்போது எங்களைத் தொடர்பு கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது ரயில்கள் ஓடும், நாங்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். அதேபோல் எங்களை நம்பி நோட்டீஸ் அச்சடிக்கும் நிறுவனத்தினர், நோட்டீஸ் விநியோகம் செய்பவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இதற்கு உடனடியாகத் தீர்வு ஏற்பட்டால் நன்மையாக இருக்கும்' என்றார்.

இத்தகைய குழுவில் சுற்றுலா செல்லும் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த கோபி கூறுகையில், ’நான் வீடியோ போட்டோ தொழில் செய்து வருகிறேன். எங்களுக்கு ஆண்டில் ஆடி, புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் எங்களுக்கு வேலை இருக்காது. இந்த சீசனில் தான் நாங்கள் ஆன்மிக மற்றும் இன்பச்சுற்றுலாக்களுக்கு குடும்பத்தோடு செல்வோம். குறிப்பாக ரயில்களில் தான் செல்வோம். குடும்பத்தோடு வயதானவர்களையும் கூட்டிச்செல்ல ரயில் தான் சவுகரியமாக இருக்கும். மேலும் விமானம், கார்களில் செல்ல அதிகம் செலவாகும். ஆண்டிற்கு இரண்டு முறை சீரடி சென்று வருவோம்.

அதேபோல் திருப்பதி, மந்த்ராலயம், குற்றாலம் போன்ற இடங்களுக்கும் ரயில்களில் செல்வோம். தற்போது கரோனா தாக்குதல் காரணமாக எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணி அழுத்தம் காரணமாக, இத்தகைய சுற்றுலாக்களை நாங்கள் செல்வது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு நாங்கள் சென்று வருகிறோம். ஆனால், தற்போது இந்த கரோனா தொற்று காரணமாக, இவை அனைத்தும் தடைபட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலத்திற்கு 3 சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.