ETV Bharat / state

ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்தம்! - தனியார் மயமாக்கல்

திருச்சி: ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எஸ்ஆர்இஎஸ் பொதுச்செயலாளர் சூரியப்பிரகாசம் கூறியுள்ளார்.

railway
author img

By

Published : Jul 16, 2019, 7:31 AM IST

மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சதர்ன் ரயில்வே எம்பிளாயிஸ் சங்கம் (எஸ்ஆர்இஎஸ்) சார்பில் திருச்சி, மதுரை, சேலம் கோட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சங்கப் பொதுச்செயலாளர் சூரியபிரகாசம், நிர்வாக தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சூரியபிரகாசம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில்வே போக்குவரத்து, ரயில் நிலையங்கள், உற்பத்திப் பிரிவு, பிரின்டிங் பிரஸ், ஒர்க்ஷாப், ஓபன் லைன் ஆகியவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும். 30 வருடம் சர்வீஸ் அல்லது 55 வயது நிறைவடைந்த தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப நினைப்பதை நிறுத்தவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்றார்.

ரயில்வே தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்தம்

ரயில்வேயை தனியார்மயமாக்குவதால் பொதுமக்களுக்கும், ரயில்வே தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்த சூரியபிரகாசம், ரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட் ஒழிக்கப்பட்டுவிட்டதால், பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு என்னென்ன திட்டங்கள் வெளியிடப்பட்டன என்பது யாருக்குமே தெரியவில்லை. மேக் இன் இந்தியா திட்டம் என்று கூறிவிட்டு வெளிநாடுகளில் ரயில் இன்ஜின்களை வாங்குகின்றனர். ஏற்கனவே ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சிபிஐ மூலம் மிரட்டி கைவிட செய்தது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் அவர், எஸ்ஆர்இஎஸ் முன்னெடுக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளும். வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். நாடு முழுவதும் 17 கோட்டங்கள் உள்ளது. அனைத்து கோட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

Intro:ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.

Body:திருச்சி:
ரயில்வே தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எஸ்ஆர்இஎஸ் பொதுச்செயலாளர் சூரியப்பிரகாசம் கூறினார்.
சதர்ன் ரயில்வே எம்பிளாயிஸ் சங்கம் (எஸ்ஆர்இஎஸ்) சார்பில் திருச்சி, மதுரை, சேலம் கோட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம், நிர்வாக தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சூரியபிரகாசம் செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் செயல் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். ரயில்வே போக்குவரத்து, ரயில், நிலையங்கள், உற்பத்திப் பிரிவு, பிரின்டிங் பிரஸ், ஒர்க்ஷாப், ஓபன் லைன் ஆகியவற்றை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும்.
30 து வருடம் சர்வீஸ் அல்லது 55 வயது நிறைவடைந்த தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் செல்ல துடிப்பதை நிறுத்தவேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும்.
ரயில்வேயை தனியார் மயமாக்குவதால் பொதுமக்களுக்கும், ரயில்வே தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ரயில்வேக்கு என தனி பட்ஜெட் ஒழிக்கப்பட்டுவிட்டது. இதனால் பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு என்னென்ன திட்டங்கள் வெளியிடப்பட்டன என்பது யாருக்குமே தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் மோடி ஆட்சியில் 26 சதவீத கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டது. இருந்தும் பல ரயில்களை இயக்க முடியவில்லை. அறிமுகம் செய்யப்பட்ட பல ரயில்கள் ஒரு சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பணம் விரயம் செய்யும் திட்டங்களை தான் மத்திய அரசு கொண்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டம் என்று கூறிவிட்டு வெளிநாடுகளில் ரயில் இன்ஜின்களை வாங்குகின்றனர். இதே போன்ற மத்திய அரசின் தவறான முடிவுகளால் தான் ஏர் இந்தியாவும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் சரியானதாக இல்லை. ஏற்கனவே ரயில் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சிபிஐ மூலம் மிரட்டி கைவிட செய்தது. ஆனால் இந்த முறை கண்டிப்பாக வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும். இதை எஸ்ஆர்இஎஸ் முன்னெடுக்கும். இதில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளும். வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும். நாடு முழுவதும் 17 கோட்டங்கள் உள்ளது. அனைத்து கோட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும். கண்டிப்பாக வேலை நிறுத்த போராட்டம் இருக்கும் என்றார்.

Conclusion:நாடு முழுவதும் உள்ள 17 கோட்டங்களில் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வேலை நிறுத்த போராட்டம் வெளியிடப்படும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.