தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதன் மாநில பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் 5, 8ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வை ரத்து செய்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடைமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் பின்பற்றி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இல்லையெனில் பிப்ரவரி இறுதி வாரத்தில் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். கூட்டத்தில் மாநில தலைவர் நடராஜன், மாநில பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்