ETV Bharat / state

காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக் கூடாது - தமிழ்நாடு அரசு - kaveri river news upadate

திருச்சி: காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது என பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி
author img

By

Published : Sep 23, 2019, 3:53 PM IST

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணையை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர்கள் தனபால், எஸ். ராமமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி.,

"காவிரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்திற்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒருவந்தூர் கிராமத்திற்கு இடையேயும், கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் முசிறி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட முடியாது. கதவணைகள் மட்டுமே கட்ட முடியும். காவிரி ஆற்றில் மேலும் கதவணைகள் எங்கெங்கே கட்டலாம் என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு மும்முரமாக உள்ளது. முதல்கட்டமாக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் கரூர் மாவட்டம் மாயவரம் அணைக்கு மேற்புறத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் ஒரு துளிகூட வீணாக கடலில் கலக்கக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதைவும் படிக்க : தஞ்சாவூர்-காவிரி மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர்!

Intro:திருச்சி முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணையை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

Body:திருச்சி: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கட்டப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணையை பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமை பொறியாளர்கள் தனபால், எஸ். ராமமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் நெரூர் கிராமத்திற்கும், நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒருவந்தூர் கிராமத்திற்கு இடையேயும், கரூர் மாவட்டம் குளித்தலை, திருச்சி மாவட்டம் முசிறி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் இந்த இரு கதவணைகள் அமையும் இடத்தை ஆய்வு செய்து உள்ளோம்.
காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட முடியாது. கதவணைகள் மட்டுமே கட்ட முடியும்.
காவிரி ஆற்றை மேலும் கதவணைகள் எங்கெங்கே கட்டலாம் என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. தற்போது முதல்கட்டமாக முதல்வர் அறிவித்த இரு இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிதாக இரண்டு இடங்களும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வரைபடம் மூலம் இந்த ஆய்வு நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக தள ஆய்வு நடைபெறும்.
காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு மும்முரமாக உள்ளது. முதல்கட்டமாக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் கரூர் மாவட்டம் மாயவரம் அணைக்கு மேற்புறத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மேற்கொள்ள மத்திய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்காக கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி கிடைத்தவுடன் முதல் கட்ட பணிகள் விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
காவிரி நீர் ஒரு துளி கூட வீணாக கடலில் கலக்க கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அதன் அடிப்படையில் காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த அறிவுரை வழங்கியுள்ளார் என்றனர்.

Conclusion:காவிரி நீர் ஒரு துளி கூட கடலில் கலந்து வீணாக கூடாது என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.