ETV Bharat / state

Power Cut: பவர் கட் பிரச்சனை.. அமைச்சர் முன்பு நாசுக்காக பேசிய திருச்சி எம்பி! - power cut

ஆட்சியர் முன்பே பால்வளத்துறை அமைச்சர்‌‌ மனோ தங்கராஜிடம் மின்வெட்டு பிரச்சனை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆவின்
கோப்புபடம்
author img

By

Published : Jun 15, 2023, 11:32 AM IST

திருச்சி எம்பி

திருச்சி: கொட்டப்பட்டு பகுதியில் அரசுக்கு‌‌ சொந்தமான ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேடையில் பேசினர். அப்போது வாழ்த்துரை வழங்குவதற்காக திருநாவுக்கரசு பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் மின் நிறுத்தம் என்பது தொடர்ந்து பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது எனவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Senthil Balaji: புழல் சிறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி.. சுயநினைவுடன் மாத்திரை சாப்பிட்டதாக தகவல்!

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் பிரச்னை இருந்து வருகிறது. தமிழக அரசு மின் விநியோகத்தை சீரான முறையில் அனைவருக்கும் வழங்கி வர வேண்டும் எனவும் இந்த மின் பிரச்னை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன் தற்போது அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நினைக்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலை பேச்சு ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம்: திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்!

தற்போது திமுக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மக்களிடையே மின் வெட்டு பிரச்னை பேசும் பொருளாக ஆகி விட்டது. உடனடியாக முதல்வர், மின்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இறுதியாக பேசுகையில் இந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள்‌ பெறும்‌ பயனாளிகள் பெயர்கள் அடங்கிய புத்தகம் மற்றும் பால்வளத்துறை திட்ட அறிக்கை முறையாக கொடுக்கவில்லை என்றும் இதை நீங்கள் தான் எனக்கு அனுப்ப வேண்டும் அமைச்சர் அனுப்புவாரா? நேற்று இரவு தான் புத்தகம் அச்சு அடிக்கப்பட்டதா? என பால் வளத்துறை அதிகாரிகளை கடுமையாக சாடினார் பால்வளத்துறை சம்பந்தப்பட்ட புத்தக தொகுப்பினை இனி வரும் காலங்களில் எனக்கும் அனுப்ப வேண்டும் அப்போது தான் திருச்சியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும் என அதிகாரிகளை பார்த்து கூறினார்.

அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் மின்வெட்டு விவகாரம் குறித்து பேசிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சரக்கில் சயனைடு கலந்து தம்பியை கொன்ற அண்ணன்.. மயிலாடுதுறை வழக்கில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.