திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன். இவர் சில தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குக் கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு