ETV Bharat / state

திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த அரசியல் கட்சியினர்

author img

By

Published : Dec 17, 2019, 1:17 PM IST

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு 13 ஆயிரத்து 386 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Trichy
Local Body Election Last Day Nomination

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தம் 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சையினரும் குவிந்தனர். அதில்,

  • ’ 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும்,
  • 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு ஆயிரத்து 443 பேரும்,
  • 404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2 ஆயிரத்து 212 பேரும்,
  • 3 ஆயிரத்து 408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும்’

என மொத்தம் 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 808 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்

இதையும் படிக்க: போலி அடையாள அட்டையுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தவரிடம் விசாரணை

Intro:திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு 13,386 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். Body:திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு 13,386 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 4,077 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 5,808 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.