திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 83 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 429ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப். 28) வரை 769 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இன்று ஒரே நாளில் 73 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 505 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. மேலும், மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் 779 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,546 பேருக்கு கரோனா உறுதி!