திருச்சி மெயின் கார்டுகேட் கோட்டை நிலைய சாலையில் பிரபல தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றிவருகின்றனர்.
இவர்கள் திருச்சி சேதுராம்பிள்ளை காலனியில் தங்கி வேலைசெய்துவருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை ரமேஷ் (43) என்பவர் கடையின் உள்ளே பால்ஸ் சீலிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ரமேஷ் திடீரென மயங்கி தரையில் விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்த கோட்டை காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில், ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயரத்திலிருந்து கீழே விழுந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : 5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!