ETV Bharat / state

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம் கோலாகலம்! - Temple function

Gunaseelam Sri Prasanna Venkatachalapathy Temple: தென் திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 9:26 PM IST

திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தேரோட்டம்

திருச்சி: தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதும்‌, குணசீல மகரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த கோயிலானதாக கருதப்படுவதால், குணசீலம் பிரன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, 48 நாட்கள் கோயில் வளாகத்தில் தங்க வைத்தால், 48 நாட்கள் முடிவில் அவர்களின் வியாதி குணப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் நம்புகின்றனர். மேலும், பிரசித்தி பெற்ற மகரிஷிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தைக் கொண்டு இந்தக் கோயிலில் பிரம்மோற்சவம் 11 தினங்கள் கொண்டாடப்படும்.

அதன்படி, 18-ஆம்‌ தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்கருட‌ வாகனத்தில் உபய நாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று (செப்.26) வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தாதா சாஹேப் பால்கே விருது பெறும் நடிகை வஹிதா ரஹ்மான்.. செங்கல்பட்டு டூ பாலிவுட் வரை கடந்து வந்த பாதை!

மேலும், தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாதவாறு தேரின் பின்புறமாக பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் வாழும் காலங்களில் செய்த பாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக் கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

மேலும், ஸ்ரீனிவாசப் பெருமாளை வழிபாடு செய்தால் பிறவிப்பலன் பெறுவர் என்னும் ஐதீகம் உள்ளதால், திருச்சி மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்திற்கான நீரை 5,000-லிருந்து 3,000 கன அடியாகக் குறைத்தது காவிரி ஒழுங்காற்றுக் குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.